இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல!! மதுரைவாயில் அம்மா உணவகம் திமுகவினரால் சூறையாடப்பட்டது!!

  -MMH

சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் திமுகவினர் உள்ளே புகுந்து அம்மா உணவகத்தை சூறையாடிய வீடியோ வெளியானதால் பதற்றம் ஏற்பட்டது.

அவர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பேனரை அதே இடத்தில் அதிமுகவினர் ஒட்டினர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக கூட்டணி தமிழகம் முழுவதும் பெருவாரியான இடங்களில் வென்றுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளள்ர்.


இந்த சூழலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, ஆட்சியை இழந்த நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவத்திற்குள் புகுந்த திமுகவினர் சிலர் சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து போட்டு அங்கிருந்தவர்களை மிரட்டினர். 

மேலும் ஜெயலலிதா படத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி கீழே போட்டு தகராறில் சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயலலிதா படத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி கீழே போட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர் கொதித்து போயினர்.

உடனடியாக அங்கு குவிந்த அதிமுகவினர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பேனரை அதே இடத்தில் ஒட்டினர். அம்மா உணவகத்தின் பெயர் பலகை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-செந்தில் முருகன், ஹனீப்.

Comments