ஆம்புலன்ஸ் வராததால் ஜேசிபியில் பெண்ணின் சடலம்!!

  -MMH

கர்நாடக மாநிலத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் சடலத்தை ஆம்புலன்ஸ் வராததால் ஜேசிபி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனோ பாதிப்பினால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மாநிலத்தில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை அனைத்தும் நிரம்பி உள்ளதால் நோயாளிகள் சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர் இந்நிலையில் பல நோயாளிகள் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண நோய்களுக்குக் கூட இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய உறவினர்கள் அச்சப்படுகிறார்கள் காரணம் கொரோனோ இருக்குமோ என்ற பீதி அவர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலையில் மயங்கி விழுந்து இறந்த பெண்ணின் உடலை பொக்லைன் இயந்திரத்தில் எடுத்துச் செல்லும் அவலம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை அடுத்த குரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தான் இவருடைய கணவர் வேறு ஒரு விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது இதனால் தனது குழந்தைகளுடன் தனியாக அவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் நேற்று திடீரென தன்னுடைய கிராமத்திற்கு வந்த அவர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி சாலையில் விழுந்தார் இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார். இதனை பார்த்த கிராம மக்கள் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் அங்கு நின்றுகொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை வைத்து சசிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி விசாரித்தபோது கொரோனோ பீதியில் மக்கள் அவருடைய உடலை தூக்க மறுத்ததாகவும் அதனால் உடலை ஜேசிபி இயந்திரத்தில் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவரின் உடலை எடுத்துச் செல்லும் காட்சியை சமூக வலைத்தளத்தில் அடையாளம் தெரியாத நபர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். தற்பொழுது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் நபர்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மனித நேயம் செத்து விட்டதாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments