முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..!!

-MMH

      கோவை மாவட்டம் கோவை மாநகராட்சியில் தினசரி வேலைக்கு வராமல் தில்லுமுல்லு செய்ததாக , முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் வேலுமணி இவர்உதவியாளராக இருந்தவர் சரவணன் இவர் கோவை மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் அமைச்சரின் சென்னை அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகிறார் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சரின் உதவியாளர் பணி முடிவுக்கு வந்து விட்டது ஆனாலும் இவர் மாநகராட்சியின் தினசரி பணிக்கு வரவில்லை சென்னையிலேயே முகாமிட்டு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழகசட்டமன்ற தேர்தலின் போது பறக்கும்படையினர் ரூபாய் 18 லட்சத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

 இது தொடர்பாக தேர்தல்ஆணையம் விளக்கம் கேட்டு கோவை மாநகராட்சி  நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.  அதற்கு பதில் ஏதும் வராத நிலையில். கோவை மாநகராட்சி ஆணையர்  குமரவேல் பாண்டியன் சரவணனை  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்  இது தொடர்பான விளக்கம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- ஷாஜஹான் மதுக்கரை.

Comments