பேருந்து இல்லாமல் தவித்த பொதுமக்களுக்கு பேருந்து அனுப்பிய சட்டமன்ற உறுப்பினர்!!

    -MMH

     9/5/2021 அன்று மாலை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து இறங்கியவர்கள் மறுநாள் ஊரடங்கு காரணமாக சென்னை செல்ல பேருந்து இல்லாமல், குழந்தைகள் உடன் தவித்துக் கொண்டிருந்தனர். அதில் பயனாளி ஒருவர் நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

உடனே நமது சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்து வரத்து கழக மேலாண்மை இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு 15 நிமிடத்தில் இரண்டு பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களை நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை.க.அன்பழகன் அவர்கள் நேரில் சென்று அவர்களை பத்திரமாக வழியனுப்பி வைத்தார். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். எனக்கு நன்றியை தெரிவிக்கவேண்டாம் நன்றியை தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கூறுங்கள் என வழியனுப்பி வைத்தார். அவர்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக சென்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பார்த்திபன், ரைட் ரபிக்.

Comments