அருள் வாக்கு என்ற பெயரில் பெண்ணை கொடூரமாக தாக்கிய டுபாகூர் பேர்வழி கைது!!

 

    -MMH

திருச்செங்கோடு அருகே அருள் வாக்கு என்ற பெயரில் பெண்ணை கொடூரமாக தாக்கிய அனில் குமார் என்ற டுபாகூர் பேர்வழி கைது. பெண்ணிற்கு அருள் வாக்கு கொடுக்கின்றேன் என்ற பெயரில் பெண்ணை சவுக்கால் அடிக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறை அதிரடி.

சாமியார் என்ற பெயரில் குடும்ப பெண்களை இது போன்றவர்களிடம் அழைத்து சென்று அவர்கள் சவுக்கால் அடித்து துன்பப்படுத்தப்படுவதை கை கட்டி பரவசத்தோடு வேடிக்கை பார்க்கும் குடும்பத்தார்கள் ”காவல்துறையின் கைதிலிருந்து தன்னையே காத்துக் கொள்ள முடியாதவன் எப்படி மற்றவர்களை  காப்பாற்றுவான்? என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும்  விழப்புணர்வு பெற வேண்டும் என பலரின் கருத்தாக இருக்கிறது.

-குமார், ஊத்துக்குளி.

Comments