ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்!! அதிர்ச்சியில் பரமக்குடி..!!

  -MMH

பரமக்குடியில் பெண் தொண்டர் ஒருவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகவேண்டும் என தனது நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்தி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓன்றியத்திற்கு உட்பட்ட  பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்  கார்த்திக் இவரது மனைவி வனிதா  (வயது 32).  

திமுக தொண்டரான இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் தனது நேர்த்திகடனை செலுத்த கோவிலுக்கு சென்றார்.

கொரோனா நடவடிக்கை காரணமாக கோவில் பூட்டி இருந்ததால் தனது நேர்த்திகடனை எப்படியும் செலுத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கத்தியால் நாக்கை அறுத்து கோவில் படியில் வைத்துள்ளார். ரத்தம் கொட்டியதில் வனிதா ஆந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வனிதாவை தூக்கி பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனிதாவை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் துண்டாகி கிடந்த நாக்கையும் போலீசார் எடுத்து சென்றனர். அரசு மருத்துவமனையில் வனிதாவுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இது அந்த ஏரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன், ஈசா.

Comments