மக்களுக்கு உணவு வழங்கிய கொரோனா பேரிடர் உதவி மைய நண்பர்கள்!!

 

-MMH

      கோவை மாவட்ட பேரிடர் உதவி மையம் சார்பில் அதன் பொறுப்பாளர் மைதீன் தலைமையில் ஹக்கீம், நசீர், இப்ராஹீம், பைசல் ஏற்பாட்டில் தொண்டாமுத்தூர் பகுதியில்  வசிக்கின்ற அஸ்ஸாம் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த கொரோனா காலகட்டத்திலும் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உணவு சமைத்து கொடுத்தும் அந்த மக்களும்க்கும் நேரடியாக வந்து உணவளித்து சிறப்பித்தார்,

யாசீன்பாய் தன்னால் நடக்க இயலாத சூழ்நிலையிலும் உதவி செய்கின்ற இடத்திற்கு நானும் வருவேன் என்று கூறி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்து, இன்னும் அதிகமான உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறினார் ஜாபர்.  இந்த உதவி செய்கின்ற அற்புதமான பணியில் பல்வேறு சகோதரர்களும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments