பாலைவனமாக காணப்பட்ட மயானம் சோலைவனம் போல் காட்சியளித்தது!!

    -MMH

திருவாரூர்மாவட்டம் பெரும் பனையூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள பழைய மயானத்தை தன்னார்வத்துடன் களத்தில் இறங்கி சுத்தம் செய்து அங்கே அழகிய மரக்கன்றுகளையும் பூச்செடிகளையும் நட்டுவைத்து மகிழ்ந்தனர்.

நாளடைவில் இந்த மரங்கள் பின் வரும் சந்ததிகளுக்கு நல்ல சுவாசக்காற்று கொடுக்கும் என்றும்  இயற்கையான முறையில் அந்த பகுதி காட்சி அளிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களுடைய வாரிசுகளாக மறைந்த திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான ஐயா விவேக் அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில்.

இந்த மரக்கன்று நாட்டும் நிகழ்வு நடைபெற்றதாக ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கூறுகின்றனர் இவர்களின் செயலை கண்டு அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரபீக், பார்த்திபன், ஈசா.

Comments