கரூர் தமிழ்நாடு அரசு காகித ஆலையில் ஆக்சிஜன் சிகிச்சை மையம் தொடக்கம்!!

 

-MMH

  கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இன்னும் மூன்று நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 150 படுக்கைகளுடன் கூடி சிகிச்சை மையம் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்படும் எனவும் கூறினார். இதன் மூலம் கரூர் மாவட்ட மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கப் பெறுவார்கள்.

 நாளை வரலாறு செய்திக்காக,

 -குமார்,ஊத்துக்குளி.

Comments