தாசில்தார் கையெழுத்தை போட்டு போலி சான்றிதழ் தயாரிப்பு!!

    -MMH

தாசில்தார் கையெழுத்தை போட்டு போலி சான்றிதழ் வழங்கியவர் மீது வழக்குப்பதிவு குன்னத்தூர் அருகே பாப்பாவலசை சேர்ந்தவர் நடரா ஜன் (வயது 65 ) . இவர் வெள்ளிரவெளி கிராமத்தில் உள்ள ஒரு நிலத்திற்கு தாசில்தார் வழங்கியது போல் உரிமைச்சான்றிதழ் தயார் செய்து போலியாக முத்திரை அடித்து போலியாக தாசில்தார் கையெழுத்திட்டுள்ளார் . 

இதுபற்றி ஊத்துக்குளி தாசில்தார் கலாவதி கவனத்திற்கு சென்றபோது சம்பந்தப்பட்ட தேதியில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்துள்ளார் . அப்போது உரி மைச்சான்றிதழ் உள்ள கையொப்பம் தான் போட வில்லை என்றும் போலியாக முத்திரை செய்து தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு இருந்தது தெரியவந்தது . இதுபற்றி உடனடியாக குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார் . புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீசார் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-குமார்,ஊத்துக்குளி.

Comments