பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

 

-MMH

                 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சற்று தளர்வுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகமாகிக் கொண்டே வருவதால், பரவல் சங்கிலியை தடை ஏற்படுத்திடும் வகையில் முழு ஊரடங்கை அரசு முன்னெடுத்துள்ளது. 

வெளியூர்களில் பேருந்து நிறுத்தம் காரணமாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்கள்  தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிடும்  வகையிலும், வெளியூர்களுக்கு பணிக்குச் சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பவர்களுக்காகவும், நேற்றும் இன்றும் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று இரவு 11.45 மணி வரை பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்து விட்டு வீடு திரும்பியவர்கள் தங்களை சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ளவும், நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளவும் சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திருமலைக்குமார்  ரைட் ரபீக்.

Comments

பயணங்கள் முடிவதில்லை...மக்களே கவனம்