பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்துக்கு மார்க்கெட் இடமாற்றம்..!!

 

-MMH

                        கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள திரு.வி.க., தேர்நிலை காய்கறி மார்க்கெட்டுகள் பழைய பஸ் நிலையத்துக்கு  தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

இதை கட்டுப்படுத்த திரு.வி.க., தேர்நிலை திடல் ஆகிய காய்கறி மார்க்கெட்டுகள் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்துக்கு வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது.  பொள்ளாச்சி நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் எளிதில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இரு மார்க்கெட்டுகளும் தற்காலிகமாக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

Comments