இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி!
முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்று இரவு 9-00 மணி வரையிலும், நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த ஊரடங்கில் எது எதற்கு அனுமதி என்பது பற்றி அரசு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு, 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.
Comments