வர்த்தக சங்கத்தின் ஊரடங்கு அறிவுரை!! பயன்பெறும் வியாபாரிகள்!!

     -MMH

திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம்:

            இன்று மே 1 விடுமுறை நாள் சனிக்கிழமை என்பதால் கொரோனா ஊரடங்கு பற்றிய பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது நீடாமங்கலம் வர்த்தக சங்கம். ஊரடங்கு குறித்து நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.பி.ஜி.ஆர்.ராஜாராமன் அவர்கள் கூறுகையில்:

நாளை மே தினம் என்பதாலும் பொதுவாகவே பெரிய நிறுவனங்கள் தொழில் கூடங்கள் தொழிற்சாலைகள் விடுமுறையாக இருக்கும். அதேபோன்று அரசு உத்தரவின்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சிக் கடைகள் மீன் கடைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளுக்கு கட்டாய ஊரடங்கு என்றும் இதைத்தவிர சனிக்கிழமை சிறு கடைகள் வியாபாரிகள் கடைகளை திறந்து கொள்ளலாம் என்றும்,  சனிக்கிழமை இரவு முதல்திங்கள்கிழமை காலை வரை அரசு உத்தரவின்படி முழு ஊரடங்கு என்றும் எந்தக் கடைகளும் திறக்க அனுமதி இல்லை என்பதை தெளிவாக கூறினார்.

வர்த்தக சங்கத்தின் இந்த அறிவிப்பு  நீடாமங்கலம் பகுதி பொதுமக்களுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-திருமலைக்குமார், ரைட் ரபீக், ஈசா.

Comments

நல்ல முன்னெடுப்பு. எல்லா நகரங்களிலும் இதுபோல் விழிப்புணர்ச்சி கூட்டங்கள் நடத்தப்பட்டால் மக்கள் மேலும் தெளிவு பெறுவார்கள்
Unknown said…
வாழ்த்துக்கள் தம்பி...
domesa said…
திருவாரூர் மாவட்டத்தில் இது போன்ற நேர்காணல், மக்களின் மீது அக்கரை கொண்டு தொலை நோக்கு பார்வையில் முன்னேற்றம் செய்வது, மற்ற மாவட்டங்களுக்கு பாதுகாப்பு, முன் எச்சரிக்கை, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட மாவட்டமாக தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக திகழ்வதில் , மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஒரு தமிழனாக....,
வாழ்க தமிழ்...
வளர்க தமிழ்நாடு...,
வளர்க தமிழர் பண்பாடு...,