பொள்ளாச்சியில் தொடர்ந்து மழைப்பொழிவால் கழிவுகள் குளத்தில் கலப்பு!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் நேற்று தொடர்ந்து 2 மணி நேரம் மழைப்பொழிவு இருந்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வால்பாறையில் உள்ள அனைத்து கழிவுகளும் படகு இல்லம் குளத்தில் கலப்பதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது மழை பொழிவால் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கழிவுகளையும் மழைநீர் அடித்துக்கொண்டு வந்து குளத்தில் கலந்துள்ளது.

இதனால் கழிவுநீர் மழைநீர் குளத்தில் கலக்காத படி இருக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கிய படகு இல்லம் வீணாகிப் போய்விடக் கூடாது என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.

-செந்தில்குமார், மூடீஸ்.

Comments