சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியத்தில் இருவர் படுகாயம். மன்னார்குடியில் பரபரப்பு..!!

 

-MMH

       திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகில் உள்ள  நெடுவாக்கோட்டை காளிஅம்மன் கோயில் அருகில்  மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும்  சாலையில்  சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மீது கார் மோதியதில்  மன்னார்குடியில் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகில் உள்ள  நெடுவாக்கோட்டை காளிஅம்மன் கோயில் அருகில் மன்னார்குடி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது  அதே சாலையில் திருவிடைமருதூரில் இருந்து பின்னாடி வந்துகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தங்கராசு தம்பதியினர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதிய கார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அன்பு நிதி,  ரைட் ரபிக்.

Comments