தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்?

 -MMH

தமிழக சட்டமன்ற பொது  தேர்தலில் 160 முதல் 172 வரையிலான தொகுதிகளை திமுக கைப்பற்றும் என பத்திரிகைகள் மற்றும் சி ஓட்டர்  நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானது இந்தத் தகவலின் அடிப்படையில் திமுக வெற்றி வாகை சூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாமல் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் மனதளவில்  இருந்து வருகின்றனர். 

பத்திரிகைகளின் கணிப்புப்படி திமுக வெற்றி பெற்றால் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி  இருக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்தானத்தில் யார் அமர்வார்கள் என்ற கேள்வி பெரிதாக உள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடப் போகிறது என்று காத்திருக்கும் பொதுமக்கள்.

என்ன தான் அரசியலில் சலசலப்புகள் ஏற்பட்டாலும் மக்கள் தீர்ப்பு சரியானதாக இருக்கும் என்பது நிதர்சனம் இருந்தாலும் மக்கள் யார் பக்கம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இன்னும் சில மணி நேரங்களில் மக்கள் யார் பக்கம் என்பது தெரிந்துவிடும்.

-M.சுரேஷ்குமார்.

Comments