கருப்புகொடி ஏற்றுவீர் கோவை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி தலமையகம் அறிவிப்பு !!

 

-MMH

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் 6 மாதங்களாகப் போராடியும், மத்திய பாஜக அரசு பிடிவாதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் , விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய மக்கள் விரோத, சட்டைகளை மத்திய அரசு இயற்ற நடவடிக்கை எடுத்து வருவதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் வரும் 26-ம் தேதியுடன் மோடி பிரதமராகப் பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மத்திய பாஜக ஆட்சியால் மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மே 26-ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போரட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி  ஆதரவு அளித்து மனிதநேய மக்கள் கட்சியினரின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பை வெளிபடுதுவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி.

-ருசி மைதீன். 

Comments