திதி கொடுக்க, தர்ப்பண வழிபாடு செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு!!

    -MMH

           கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்பகுதியில் உள்ள படித்துறையில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கமாக வைத்துள்ளனர். 

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி அம்மாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை,மகாளய அம்மாவாசை உள்ளிட்ட நாட்களில் கோவை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இப்பகுதிக்கு வந்து இறந்து போன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். இதன் மூலம் இறந்து போன தங்கள் முன்னோர்களுடைய ஆத்மாக்களின் ஆசி தங்களுக்கு கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது. 

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் பக்தர்கள் பேரூர் படித்துறை பகுதியில் திதி கொடுக்க, தர்ப்பண வழிபாடு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது .

இதனால் இறந்துபோன தங்களுடைய உறவினர்களுக்கு எங்கு சென்று திதி மற்றும் தர்பணம்  கொடுப்பது என்று தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர் என்பது நிதர்சனம். மேலும் இறந்து போன உறவினர்களின் 16வது நாள் கருப்பு களிக்கும் நிகழ்வுக்கு ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கிட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

-M.சுரேஷ்குமார்.

Comments