இனி வீடுகளிலேயே ரேபிட் பரிசோதனை செயது கொள்ளலாம் ரேபிட் ஆன்டிஜன் முறைக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல்..!!

 

-MMH

                        ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் (RAT) வீடுகளிலேயே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் புதிய கிட்டிற்கு இந்தியGB மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 2ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில் பல உயிர்களை இழந்து வாடும் மக்களுக்கு. வைரஸ் தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனைகளும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு சற்று குறைவு- 2,76,261 பேருக்கு கொரோனா உறுதி- 3,880 பேர் மரணம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20.08 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மேலும் துல்லியமாகக் கண்டறிய இன்னும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐசிஎம்ஆர் ஒப்புதல், இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே இந்த ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் ஒருவருக்கு பாசிடிவ் என்ற முடிவு வந்தால், அவர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகடிவ் என முடிவு வந்தால், அவர் உடனடியாக RTPCR பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் இதைப் பயன்படுத்தினால் போதும்" எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை CoviSelfTM(PathoCatch) Covid-19 OTC Antigen LF ஆகிய ரேப்பிட் சோதனை கருவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் விளக்கப்பட்டிருக்கும் முறையைப் பின்பற்றி ஒருவர் கொரோனா பரிசோதனையை வீடுகளிலேயே மேற்கொள்ளலாம். எப்படி பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இதற்காகக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தனியாகச் செயலிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செயலிகளிலும் கொரோனா பரிசோதனையை வீடுகளில் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்தவர்கள் ரேப்பிட் சோதனை கருவிகளில் தெரியும் தங்கள் சோதனை முடிவுகளைப் புகைப்படமாக எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புகைப்படங்களும் சோதனை முடிவுகளும் ஐசிஎம்ஆர் சர்வர்களில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ஷாஜகான். ஈசா.

Comments