தேனியில் மக்கள் சேவை ஆற்றிய பத்திரிக்கை நிருபர் பலி..!!

 

-MMH

      தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த நிருபர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மரணம் கொரோனா காலத்தில் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் எம் சரவணகுமார். தனியார் பத்திரிகை நிருபர். சில நாட்களுக்கு முன் கொரோனா பெருந்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சரவணக்குமாரை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ந்தனர். பின் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சரவணகுமாரைக் கொண்டு சென்றபோது வழியிலே உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி பிரபா மற்றும் வருண், கிரீஸ் என 2 மகன்கள் உள்ளனர். சரவணகுமாரின் இறுதிச் சடங்கில் பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும்   கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்ப நலன் கருதி அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்..

நாளை வரலாறு செய்திக்காக,

 -குமார்,ஊத்துக்குளி .ஈசா.

Comments