மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆர்டிஓ அலுவலகங்களில் புதிய கட்டுபாடுகள்!!
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் கடும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே செல்லக் முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், வாகனங்கள் தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிப்பதில் போன்ற வாகனங்கள் தொடர்பான சேவைகளை இணையத்தில் பெற மத்திய போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
இதில் குறிப்பாக நீங்கள் 18 பூர்த்தி அடைந்து, ஆதார் வைத்திருந்தால் போதும் டிரைவிங் லைசன்ஸ் விண்ணப்பிக்கலாம்.
லைசன்ஸ் விண்ணப்பம் (LLR), லைசன்ஸ் புதுப்பிப்பது, டூப்ளிகேட் லைசன்ஸ், ஆல் இந்தியா பெர்மிட், முகவரி மாற்றம் போன்ற 18 வகையான சேவைகளை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சேவைகளை https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையத்திற்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
-சுரேந்தர்.
Comments