தஞ்சையில் பரவலாக மழை!!

  -MMH

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.

குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  கன்னியாகுமாரி மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. 

இந்த சூழ்நிலையில் நேற்று தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில்  பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதனால்  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நல்ல குளிர்ச்சியான காற்று நேற்று மாலை முழுவதும் தொடர்ந்து நீடித்தது .

கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும் வெயில் இதனால் சற்று தணிந்து நேற்று மாலை மற்றும் இரவு  தட்பவெட்பம் சற்று குளிர்ந்து லேசான குளிர்ந்த காற்று வீசியது.

இதனால்   மக்கள்  நேற்று இரவு வெக்கை இல்லாமல்  நிம்மதியாக உறங்க முடிந்தது.

அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது .

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments