உயிர்காக்கும் மருந்தினை பெற காத்திருந்தவர்களுக்கு உணவளித்த மனிதநேயர்கள்!!

  -MMH

கொரோனா பெருந்தொற்று நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும "ரெம்டெசிவிர்" என்னும் வைரஸ்  எதிர்ப்பு மருந்தானது 100மிகி அளவுள்ள குப்பி 2000ருபாய்க்கு விற்கபட்டு வந்தது , தற்போதைய அதீத தேவையின் காரணத்தை பயன்படுத்தி  செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கி கள்ளச்சந்தையில் பல்லாயிரம் ருபாய்களுக்கு  விற்பனை செய்திடபடுகின்றது.

ஒருபுறம் மக்கள் மருந்து கிடைக்காமல் திண்டாடுவதும் , மறுபுறம்  இலவு வீட்டில் கிடைத்தவரையிலும் லாபம் என்று அதீத லாபம்வைத்து கள்ளச்சந்தையில் விற்பதும் நடைபெறுவதை தடுக்க , மாநில அரசு கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 3 நாட்களாக "ரெம்டெசிவிர்"  மருந்தினை விற்பனை செய்கின்றது.

முறைகேடுகள் நடைபெறாதிருக்க நோயாளிகளின் சிடி ஸ்கேன் அறிக்கை , மருத்துவர்களின் பரிந்துரை கடிதம், ஆதார் அட்டை போன்றவற்றை காட்டி  வாங்கி செல்கின்றனர் , நேற்றுவரை 12000 நபர்கள் பெற்றுள்ளதாக மருத்துவமனை தனது செய்தியில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டங்கூட்டமாக பல மணிநேரமாக  வரிசையில் நிற்கும் நிலையினை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பினை சார்ந்த வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் , தாங்கள் நோன்பிருக்கும் நிலையினையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்துக்கொண்டிருந்த பலநூறு நபர்களுக்கு உணவு , தண்ணீர் போன்றவற்றை இலவசமாக தந்தனர்.

இவர்களின் இத்தகைய மனிதாபிமான செயல்களை தங்களின் உறவினர்களின் பிணியினை போக்க காத்திருந்த  உறவினர்கள் மெச்ச பாராட்டினார்கள்.

-நவாஸ்.

Comments