முதல்வர் ஸ்டாலின் கொங்குமண்டல வருகை பயணம்.. எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக தேசிய அளவில் Twitter ல் ட்ரெண்டாகியது #GoBackStalin..!

-MMH

            இது பிகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் பாஜக ID Wings மூலமாக செயல்படுத்திய தகவல்கள் தற்போது வெளிச்சத்தில் வந்துள்ளது. நேற்று முதல்வர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் முதல்முறையாக  #GoBackStalin ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானதை கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை திறம்பட ஆய்வு செய்து வந்தார். இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வால் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. மேலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.

இதற்கிடையில் நேற்றைய தினம் கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கோவை மட்டுமல்ல எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதும் அடுத்த நொடியே.

#westandwithstalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசியளவில் ட்ரெண்ட் ஆனது. Mமேலும் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. உலகாளவில் நான்காவது இடம் பிடித்தது. ஓர் மாநிலத்திலிருந்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது இதுவே முதல் முறை.

-ருசி மைதீன்.

Comments