கோவையில் 1500 நபர்களுக்கு இலவசமாக பசும்பால்..!!

  -MMH

கோவையில் தமுமுக, ஆசை நெய் இணைந்து பசும்பால் 1500 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதி இன்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் கோவையில் உள்ள ஆசை நெய் நிறுவனம் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு பசும்பால் அரை லிட்டர் பாக்கெட் சுமார் 1500 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனுடன் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மதியம் முட்டை பிரியாணி 300 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர்  உமர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது முன்னிலையில் ஆசை இணை நிறுவனர் யாசர், நிஷர்,உமர் பாரூக், தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, நெய் பாரூக், நெய் ரபீக், தமுமுக மாவட்ட தலைவர் அஹமத் கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான்.

தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளர் பசீர், மமக கிழக்கு பகுதி செயலாளர் ரபீக், ஊடகப்பிரிவு செயலாளர் சிராஜ்தீன், முன்னாள் நிர்வாகி மைதீன் சேட், சாரமேடு கிளை தலைவர் பைசல், கிளை மமக செயலாளர் அப்துல் சலாம், சாரமேடு கிளை நிர்வாகிகள் யாக்கூப், அக்கீம், உசேன், மற்றும் தமுமுக மமக ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-I. அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments