சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்!! - ஜூலை 1-ஆம் தேதிக்குள் ஐஎப்எஸ்சி குறியீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்!!

    -MMH
    சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தங்கள் வங்கி கணக்கின் ஐஎப்எஸ்சி குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி அடுத்த மாதம் ஜூலை 1ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 1 முதல் எஸ்.ஓய்.என்.ஒ.பி (SYNB) என தொடங்கும் அனைத்து IFSC கோடுகளும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக CNRB எனத் தொடங்கும் IFSC கோடுகளை பயன்படுத்த வேண்டும். ஆக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளைகளில் சென்று அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய சிண்டிகேட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி கோடுகளை இணையதளம் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம் அதற்காக நீங்கள் https://canarabank.com/IFSC.html என்ற இணையதளம் வாயிலாகச் சென்று உங்களுடைய பழைய சிண்டிகேட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி கோடுகளை கொடுத்து தேர்வு செய்து பிறகு புதிய ஐஎஃப்எஸ்சி கோடு கனரா வங்கி மூலம் பெற்றுக்கொள்ளலாம். அப்படி ஒருவேளை உங்களுக்கு இணையதளம் மூலம் அதனை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால் நீங்கள் கனரா வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய 18004250018 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம்.

இது தவிர தற்போதைய சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் தற்போதைய ஸ்விஃப்ட் குறியீட்டை நிறுத்துவதாகவும் கனரா வங்கி அறிவித்தது. அதுமட்டுமின்றி MICR கோடுகள் செக் புக் என அனைத்தும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஐஎப்எஸ்சி கோடு உள்ளிட்ட அனைத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அப்படி ஒருவேளை மாற்றவில்லை என்றால் நீங்கள் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று கனரா வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

-சுரேந்தர்.

Comments