கோவைக்கு 4வது தவணையாக ரயில் மூலம் 203 டன்ஆக்ஸிஜன் வருகை!!

 

-MMH

    கோவைக்கு 4வது தவணையாக ரயில் மூலம் 203 டன் ஆக்ஸிஜன் மதுக்கரை ரயில் நிலையத்திற்கு வந்தது. தமிழகத்தில் மருத்துவ ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. கடந்த 20ஆம் தேதி கோவை முதல் தவணையாக 30 டன் திரவ ஆக்சிஜன் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இரண்டாம் தவணையாக கடந்த 24 ஆம் தேதி 2 டேங்கர் லாரிகளில் 20 டன் ஆக்சிசன் ஒடிசாவில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. கடந்த 27ஆம் தேதி மூன்றாவது தவணையாக 6 டேங்கர் லாரி மூலம் 90 டன் மதுக்கரை ரயில் நிலையம் வந்தடைந்தது.

இந்த நிலையில் 4வது தவணையாக ஒடிசா மாநிலத்தில் இருந்து 23 ஆகிய 4 லாரிகளில் மதுக்கரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுக்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் இறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதி உள்ள ஆக்ஸிஜனை உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments