சிங்கம்புணரியில் கலைஞரின் 98 ஆவது பிறந்த நாள் விழா! மருத்துவர் சமுதாய மக்களுக்கு உதவி!

 

-MMH

                  தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும், சமூக சமத்துவத்துக்காவும், பெண் விடுதலை, பெண்கல்வி, பாலின சமத்துவத்துக்காய் ஓயாது உழைத்த, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் கருணாநிதி. சுயமரியாதை, சமூகநீதிக்காக இறுதிவரை போராடிய மாபெரும் போராட்டக்காரர். இந்திய ஒன்றியத்தின் தவிர்க்க இயலா அரசியல் ஆளுமை கலைஞர் கருணாநிதி,

அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறிமாறி பார்த்த அரசியல் ஆளுமைகளில் கலைஞர் கருணாநிதியை போன்று எவருமில்லை. தமிழக அரசியலில் ஒவ்வொரு அசைவும், எழுச்சியும், எதிர்ப்பும் அவரை சுற்றியே சுழன்றன. மாநில அரசியலிலும் மத்திய அரசியலிலும் திமுக தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி ஏற்படுத்திய மாற்றங்கள், வரலாற்றுப் பக்கங்கள். 

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சிப்காட் தொழில் வளாகங்கள், பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பேருந்துகள் நாட்டுடமை, பொது வினியோகத் திட்டம், திருமண மற்றும் மறுமண உதவித் திட்டங்கள், உழவர் சந்தைகள் என நீளும் தன்னுடைய தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தவர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை அளித்து, அதனை அரணாகக் காத்த சமூகநீதிப் போராளி.

அவரது 98வது பிறந்தநாள் விழா தமிழ்நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரியில் மருத்துவ சமுதாய குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வாக கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 76 மருத்துவ சமுதாய குடும்பத்தினருக்கு கொரோனா கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர், பொன்.ரகு, சிங்கம்புனரி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, நகரச் செயலாளர் யாகூப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ந.அம்பலமுத்து, மு.சோமசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், குடோன் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர பொருளாளர் கதிர்வேல், நகர அவைத்தலைவர் காந்திமதி சிவகுமார், TAPCMS சங்க துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன்,

நகர இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசாத், தொழிலதிபர் புகழேந்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன் மற்றும் சிங்கம்புணரி நகர மருத்துவ சமுதாய பேரவைத் தலைவர் லெ.சந்தோஷ் குமார், செயலாளர் சின்னாண்டி, பொருளாளர் வீ.அழகேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments