முறைகேடுகளுக்கு துணை போகும் செய்தி துறை அதிகாரிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம்!!

 -MMH

    முறைகேடுகளுக்கு துணை போகும் செய்தி துறை அதிகாரிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம். 

தமிழக அளவில் நாளிதழ், தொலைக்காட்சிகளில் பணிபுரிவோருக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கோவை போன்ற நகரங்களில் குறிப்பிட்டவர்கள் மட்டுமின்றி, கட்சியினர், கட்சி சார்ந்த ஐடி விங்க் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டையும், வாகன ஸ்டிக்கரும் தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. 

இப்படி பிரஸ் ஸ்டிக்கரை பயன்படுத்தி பலரும் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போதும் அதே நிலை தொடருகிறது. 

ஒரு பத்திரிகை வெளிவந்த பிறகு குறைந்தது மூன்றாண்டுகள் கழித்தே அடையாள அட்டை, வாகன ஸ்டிக்கர் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதையெல்லாம் மறந்து கட்சியினருக்கு ஸ்டிக்கர், அடையாள அட்டை வழங்கி பெரும் சேவை செய்து இருக்கின்றனர் செய்தி துறை அதிகாரிகள். 

இதனால் பத்தாண்டு, பதினைந்து ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அரசின் அங்கீகார அடையாள அட்டை கேட்டு அலைந்து திரிந்ததுதான் மிச்சம். 

ஆனால் கட்சி கொடியை காரில் கட்டி ஊடக ஸ்டிக்கர் ஒட்டி காரில் வலம் வரும் ஒரு சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை கண்டித்தும், தகுதி மீறி வாகன ஸ்டிக்கர், அடையாள அட்டை வழங்கியதை கண்டித்தும், உண்மையான பத்திரிகையாளர்களுக்கு அரசின் அங்கீகார அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் வரும் திங்கட்கிழமை காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். இடம் பின்னர் அறிவிக்கப்படும். 

-பீர் முகமது.

Comments