எச்சரிக்கை சுவரொட்டி இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் தமிழ் சாலை!! -

   -MMH
    எச்சரிக்கை சுவரொட்டி இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் தமிழ் சாலை, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு..!!

தூத்துக்குடியின் முக்கிய சாலையான பாளையங்கோட்டை ரோடு WGC , தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின் தமிழ்ச் சாலை என்று அழைக்கப்படுகிறது. 

அதில் முக்கியமாக வஉசி பெட்ரோல் பங்க் நேரெதிராக உள்ள சாலையின் உள்ள காங்கிரீட் கல்லில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர், சிக்னல் போன்ற எந்தவித  அடையாளமும் இல்லை. அதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று விபத்துகள் நடந்துள்ளது. உள்ளூர்க்காரர்கள் தடுமாறும் அந்த குறிப்பிட்ட இடத்தில் விவரம் தெரியாத வெளியூர் வாகனங்கள் தொடர்ச்சியாக காங்கிரீட் கல்லில் மோதி விபத்தில் சிக்குகிறது.

கடந்த வாரம் ஒரு இனோவா கார் விபத்தில் சிக்கியது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு பைக் அதே இடத்தில் விபத்தில் சிக்கியது.

நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த ஒரு கார் அதே இடத்தில் விபத்தில் சிக்கியது. காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவரின் தலையில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள சிட்டி மருத்துவமனையில் மூன்று தையல் போடப்பட்டது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அந்த குடும்பத்தினருக்கும் வேண்டிய அவசர உதவிகள் செய்யப் பட்டது.

மாவட்ட நிர்வாகம் துரித கதியில் நடவடிக்கை எடுத்து தொடர்ச்சியாக ஏற்படும் விபரீதங்களை தடுக்கவும், உயிர் பழி வாங்க துடிக்கும் அந்த இடத்தில் உரிய எச்சரிக்கை செய்யவும் வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

- வேல்முருகன் தூத்துக்குடி. ஈசா.

Comments