பொள்ளாச்சியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மனு..!!

-MMH

                     கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு  சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் மூலம் மனு கொடுக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி மத்திய அரசு CBSE மாணவர்களுக்கான 2 பொதுத்தேர்வை மாணவர்களின் நலன் கருதி இரத்து செய்வதாக  (01-06-2021) அறிவித்துள்ளது.

உண்மையிலேயே மாணவர்களின் நலனில் அக்கறையிருந்தால் பெருந்தொற்று குறைந்தவுடன் முழு பாதுகாப்புடன் CBSE மாணவர்களுக்கான +2 பொதுத்தேர்வை நடத்தியிருக்கலாம். மத்திய அரசுக்கு உண்மையிலேயே மாணவர்களின் நலனில் அக்கறையிருந்தால் அகில இந்திய தகுதித் தேர்வுகள் அனைத்தையும் இரத்து செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு +2 மாணவர்களின் பொதுத்தேர்வை இரத்து செய்யவேண்டிய அவசியமில்லை. பெருந்தொற்று குறைந்தவுடன் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எழுத்துத் தேர்வாக தமிழ்நாடு அரசு நடத்திட வேண்டும்.

+2 பொதுத்தேர்வு தேதியை முன்தேதியிட்டு ஒருமாத காலத்திற்கு முன்பே தமிழக அரசு அறிவிப்பு செய்திட வேண்டும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அதிக எண்ணிக்கையில் எழுத்துத்தேர்வு மையங்களை அமைக்கலாம். இதுகுறித்து கருத்துகள் கேட்டால் தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம். எனவே மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு +2 தேர்வினை இரத்து செய்ய வேண்டியதில்லை. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட்டாலும்

தேர்வு உறுதியாக நடைபெறும் என்பதனை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிப்பு செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என மனு கொடுக்க பட்டுள்ளது.மனுவை பொள்ளாச்சி  சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல் பெற்று கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.

Comments