முழு ஊரடங்கில் புதிய தளர்வு..!!

-MMH

        தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வழங்கவும் அனுமதி அளித்துள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments