கோவையில் இறைச்சி பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!!

-MMH

      கோவை மாநகராட்சி பகுதிகள இறைச்சி பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை online மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்  ஊரடங்கு ஆரம்ப நாட்களில்  வாரத்தில் சனி ஞாயிறு  இரண்டு நாட்கள் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்படுவதால் தொற்று பரவக்கூடிய சூழ்நிலையில்   தமிழகஅரசு இறைச்சிக் கடைகள்  இயங்காது என்று அறிவித்திருந்தது . தற்போது முழு ஊரடங்கு பிறப்பித்த நிலையில்,

இறைச்சி கடைகள் எங்கும் இயங்காத என்ற சூழ்நிலையில்  இருக்கிறது.மக்கள் ஞாயிற்றுக்  கிழமைகளில் இறைச்சிக்காக அங்குமிங்கும்  சுற்றுவதால் ரோடுகளில் அதிக வாகனங்கள் பார்க்க முடிகிறது. முழு ஊரடங்கு இல்லாத போல் காணப்படுகிறது. அரசு காய்கறிகளை ஆன்லைன் மூலம் தொலைபேசி மூலம் வினியோகம் பண்ணலாம் என்று அறிவித்திருந்தது அதேபோல்இந்த நிலையில், பேக்கிங்   செய்து கோழி இறைச்சியையும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை online மூலம் விற்பனை  செய்யலாம்    என்று  மாநகராட்சி ஆணையர்  அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார். வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யலாம் என்று மீன்வளம் மற்றும் கால்நடை முதன்மை அமைச்சக செயலாளர் அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ஆரோக்கியராஜ். ஈசா.

Comments