போத்தனூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் பன்றிகளின் அட்டகாசம் முகம் சுளிக்கும் குடியிருப்புவாசிகள்!!

     -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீ ராம் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக இந்த பகுதியில் அதிக அளவில் பன்றிகள் மேய்ச்சலுக்கு விடுவதாக புகார்கள் வந்துள்ளன. கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் பன்றிகளை வளர்க்கும் ஒரு சில நபர்கள் தாங்கள் வளர்த்து வரும் பன்றிகளை சரிவர கட்டுப்படுத்தி வளர்க்கவில்லை  என்றும். அந்தப் பகுதி முழுவதும் மேய்ச்சலுக்கு விடுவதாக புகார் வந்த நிலையில் ஸ்ரீராம் நகர் பகுதியில் அதிக அளவில் இந்த பன்றிகளை நடமாட்டம் இருப்பதாக அந்தப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சப் படுவதோடு.

தொற்று நோய் பரவல் காரணமாக இத்தகைய பன்றிகள் தங்களது வீட்டின் பகுதியில் வருவது முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் அந்த பன்றிகளை விரட்டி விடும் பொழுது எதிர்த்து கடிக்க வரும் நிலை, காணப்படுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளாகின்றனர். இதை உடனடியாக கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சின்னராசு.

Comments