தொடர் விபத்தில் மகுடஞ்சாவடி மேம்பாலம்..!!

 

-MMH

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி பகுதியில் கடந்த ஆட்சியால் 45 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் 97 சதவிகிதம் பணி முடிந்து சில பணிகள் தாமதத்தால் திறப்புவிழா காணாமல் தற்போது சோதனை ஓட்டதில் இருபுறமம் வாகனங்கள் சென்றுகொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை பெய்த மழையில் மேம்பாலத்திலிருந்து கீழேசர்வீஸ் ரோடு அருகில் ஆர்கே.திருமண மண்டபம் முன்பு பெருமளவில் வெள்ளம்போல் தேங்கியது சேலத்தில் இருந்து கோவை சென்ற  மருத்துவ உபகரண நிறுவன அதிபர் அலெக்ஸ் என்பவர் ஓட்டி வந்த கார் மழை வெள்ளத்தில் சிக்கி எதிர்புறம் சேலம் மார்க்க சாலையில் 100 அடி தூரம் உருண்டு சென்று நின்றது.

அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினார் எதிரில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காவல்துறையினர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள் அந்த சமயத்தில் சங்ககிரியில் இருந்தது சேலம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளான கார் மீது மோதி வாலிபர் ஒருவர் படுகாயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேநேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பல்வேறு வாகனங்களும் பழுது ஏற்பட்டு சென்றது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மேம்பாலத்தை சீரமைத்து உரிய வடிகால் வசதியை உறுதி செய்யுமாறு மகுடஞ்சாவடி ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கலைஅரசன் மகுடஞ்சாவடி  / சோலை ஜெய்க்குமார்.

Comments