லாரி ஓட்டுனர்களின் குமுறல்கள் கண்டுகொள்ளுமா மத்திய மாநில அரசுகள்..!!

-MMH

       லாரி ஓட்டும் தொழிலாளியின் அவல நிலைக்கு கடந்து 50 ஆண்டுகளில் இதுவரை ஏதாவது ஒரு நன்மை செய்து கொடுத்தார்கள் என்று யாராவது ஒருவர் ஆதாரத்துடன் கூற முடியுமா...?  அதற்கு நிகராக ஒன்று இன்ஷ்ரன்ஸ் ஏறும் இல்லை டாக்ஸ் ஏறும் இல்லை டீசல் பெட்ரோல் விலை ஏறும். இல்லை உலகில் எங்கும் இல்லாத RTO ஆபீஸில் 500க்கு ஒட்டிய ஸ்டிக்கர் 3500ரூபாய் கொடுத்து ஒட்டவேண்டும் என்று உத்தரவு போடுவார்கள்.இல்லை700ரூபாய்க்கு‌ஒரு FC க்கு வேக கட்டுப்பாடு கருவிகள் வைத்து தொடர்ந்து ரினிவல் பண்ணி ஓட்டினோம்.

எந்த கம்பெனி நடத்துபவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அதிக அளவில் கவனித்து விடுவதால் அவனுக்கு ஒப்புதல் கொடுத்து அந்த கருவியை 10பைசா பிரயோஜனம் இல்லாத பொருளுக்கு 5000ஆயிரம் 6000ஆயிரம் கொடுத்து ஒவ்வொருFC க்கும் மாட்டவேண்டும் என்று உத்தரவு போடுவார்கள். இவ்வளவு ஏன் இன்று உலகில் எந்த நாட்டிலும் கொராணா நோய் பரவி நாளுக்கு நாள் 5000பேர்செத்து கொண்டு இருக்கிறார்கள் அப்படி இருக்க "ஓட்டுநருக்கு நோய் பரவாதா அவர்கள் என்ன   சாகா வரம் பெற்று இருக்கிறார்களா..!

கண்டம் விட்டு கண்டம் போய் ஒவ்வொரு பொருளையும் உண்ண உணவு இல்லாமல் உறக்கம் இல்லாமல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு விவசாய உணவு பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்ப்பதில் ஓட்டுநருக்கு நிகர் ஓட்டுநரே ...! அப்படி இருக்கும் போது நகர சுத்தி தொழிலாளிகள்.நர்ஸ் டாக்டர் ஏன்  காவல் துறை அனைவரையும் முன் களப்பணியாளர்கள் என்று சொல்லும் அரசாங்கம் ஏன் ஓட்டுநராகிய உங்களை முன் களப்பணியாளர்கள் வரிசையில் சேர்க்க வில்லை.ஏன்.

 உங்களுக்கு ஆதரவாக எந்த அரசும் இல்லை உங்களுக்கு ஆதரவாக பேசி உரிமை குரல் கொடுத்து பேச எந்த அரசியல் கட்சியும் இல்லை பொதுமக்கள் யாரும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க எந்த ஒரு நபரும் இல்லை. ஓட்டுநர் நீமட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு குடிமகனும் ஒரு வேளை சோற்றுக்கு  சிரமப்பட வேண்டும் என்பதை ஏனோ மறந்து விட்டார்கள். ஊருக்கு உள்ளது நமக்கு என்று நினைத்து எந்த ஒரு வாகனமும் "ஓட்டுநர் இயக்காமல் இருந்து இருந்தால் உணவு தட்டுபாடு குறைந்த பட்சம் ஐந்து நாட்களில் வந்து விடும்" 

அப்போது தெரியும் ஓட்டுநர் பணி என்ன என்று உங்களை பற்றி நன்கு அறிந்து வைத்து உள்ளது அரசாங்கம். உங்கள் இடத்தில் ஒற்றுமை ஒரு துளியும் இல்லை என்று. ஓட்டுநர் சொல்லும் நிலை எனக்கு குடும்பம் குழந்தை இருக்கிறது வண்டி கடன் இருக்கிறது. உனக்கு கடன் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அந்த கடனை அரசு அடைக்க போகிறதா இந்த நிலையில் பைனான்ஸ் காரர்கள் வட்டி மேல் வட்டி போட்டு உன் தலையில் சுமையை ஏற்றி விட்டான்.

கடன் கொடுத்தவன் வண்டியை சீசிங் செய்ய வரும் போது நீங்கள் கூறுவது அரசு எங்களுக்கு தவனை தேதி ஆறு மாதங்கள் தள்ளி காலக்கெடு கொடுத்தார்கள் என்று வாதிடும் போது நிதி நிறுவனம் சொல்லும் ஒரு வார்த்தை சொன்னான் என்று சொல்கிறீர்கள். அப்ப கடனை சொன்னவன் எவனோ அவனை வந்து கடனை அடைக்க சொல் என்று கூறுகிறான். "எப்பவுமே அரசு வாய் மொழியாக சொல்கிறதே தவிரஎந்த ஒரு விஷயமும் செயலுக்கு வராது. என்பதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்.

 ஒன்றேகால் வருடம் பள்ளி கல்லூரி ஏதும் திறக்காமல் வீட்டில் இருக்கும் ஆசிரியர்களுக்கு முப்பது ஆயிரம் முதல் ஒன்றேகால் லட்சம் வரை உழைக்காமல் சம்பளம் கொடுத்து கொண்டு இருக்கும் அரசு ஏன் உங்களுக்கு மனம் இறங்கி வர மறுக்கிறது. மோட்டார் வாகன தொழில் செய்யும் எவரிடமும் ஒற்றுமை கிடையாது.ஒருவர்இருவர் வீட்டில் இருக்கும் போது கொல்லைப்புற வழியாக வன்டி ஓட்டுகிறான்.

அப்படி இருக்கும் போது உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் போன் போடுங்க உங்களுக்கு உதவி கிடைக்கும் என்று சொல்வது கேலி கூத்தாடி போல் இருக்கும். நாட்டின் முதுகெலும்பு ஆகிய உங்களுக்கு ஒரு மன்னும் கிடையாது என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமான முறையில் குடும்பத்தை எப்படி நகர்த்தி செல்ல போறோம் என்பதை ஆராய்ந்து செயல்படுங்கள் என்று லாரி ஓட்டும் சங்கத்தினர். தங்களுடைய மனக்குமுறல்களை குறைகளை அரசு செவி சாய்த்து உதவி செய்ய வேண்டுமென்று ஓட்டுனர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு தமிழக மற்றும் மாநில அரசு இனிமேலாவது ஏதும் நடவடிக்கை எடுக்குமா என காத்துக் கிடக்கின்றனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன் தூத்துக்குடி .ஈசா.

Comments