பொது விநியோக திட்ட இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!! - புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதில் சிக்கல்!

    -MMH
     தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொது விநியோக திட்ட இணையதளம் முடங்கியது. பராமரிப்பு பணிகள் காரணமாக சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்ற குடும்ப அட்டைகளை தேர்வு செய்து விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதன்படி, PHH, PHH - AYY, NPHH, NPHH - S, NPHH - NC ஆகிய ஐந்து வகையான குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் 6.82 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த குடும்ப அட்டைகள் மூலம் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

இந்த நிலையில், தமிழக அரசின் உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற பொது விநியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பராமரிப்பு பணிகள் காரணமாக பொது விநியோக திட்ட இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தால் பொது விநியோக திட்ட இணையதளம் மிகவும் பிஸியாக இருந்தது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பொது விநியோக திட்ட இணையதளம் திடீரென முடங்கியிருக்கிறது.

அதில் எந்தவொரு சேவையையும் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதுபற்றி விசாரிக்கையில், தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் கூடிய சீக்கிரம் இணையதளம் பயன்பாட்டிற்கு வரும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-சுரேந்தர்.

Comments