கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வரதராஜன் நியமனம் !! தென்றல் செல்வராஜ் நீக்கம்!!

 

-MMH

                கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் அவருக்கு பதிலாக டாக்டர் பொள்ளாச்சி கி. வரதராஜன்  கோவை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இந்நிலையில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் டாக்டர் கி.வரதராஜனுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தான் டாக்டர் கி.வரதராஜன் அவர் தோல்வி அடைய கட்சிக்குள் இருந்த பூசல்கள் தான் காரணம் என்று கட்சிக்குள் குரல்கள் ஓங்கி ஒலித்தன  ஏனெனில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதிருப்தியைக் கடந்தும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது மேலும் கோவை மாவட்டத்தில் திமுகவின் மொத்த தேர்தல் தோல்விக்கு கோஷ்டி பூசல் மற்றும்  தென்றல் செல்வராஜ் தான் காரணம் என்று கூறப்பட்டது. 

இந்த சூழலில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜை மாற்ற வேண்டும் என்று குரல்கள் ஒலித்ததால் அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது அதிமுக 9 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் திமுக தலைமை இப்போது முதல் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது இனியும் நடவடிக்கை தொடரும் என கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் திமுக பொறுப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-M.சுரேஷ்குமார், தமிழக துணை தலைமை நிருபர்.


Comments