கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு தேனீர் வழங்கும் மஜக இளைஞரணியினர்!!

    -MMH

கோவையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் அதை தடுக்கும் பொருட்டு அனைத்து துறையினரும் தீவிர பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக காவல் துறையினர் சாலைகளிலேயே நின்று கொண்டு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பைசல், ரஹ்மான், அவர்கள் தலைமையில் நெளபல் ரிஸ்வான், உள்ளிட்ட இளைஞரணியினர் காவலர்களுக்கும் மற்ற பொதுமக்களுக்கும் தேனீர் வழங்கி வருகிறார்கள்.


தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்கும் மேலாக இச்சேவையை செய்துவரும் இவர்களை காவல்துறையினரும் பயணடைந்த மக்களும் பாராட்டினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments