கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற இளம்பெண் உயிரிழப்பு!!

      -MMH

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்(30). கார் மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவரது மனைவி சுபா(28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுபாவை பிரசவத்திற்காக நேற்று முன்தினம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு நீர்ச்சத்து குறைவாக இருப்பதாக தெரிவித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் சுபாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அதற்குள் தீடீரென சுபா இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுபாவுக்கு டாக்டர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் உறவினர்கள் மத்தியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சுஜீத் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. 

இதையடுத்து கடம்பூர் ராஜீ எம் எல் ஏ., சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் முருகவேல், டாக்டர் அனிதா, உதவி கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார் அமுதா மற்றும் அதிகாரிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரி‌ கண்காணிப்பு அறையில் சுபாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் உரிய விசாரணை நடத்தப்படும் என அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது   இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-வேல்முருகன், தூத்துக்குடி . ஈசா .

Comments