என் மீது எத்துணை வழக்கு போட்டாலும் சரி-எஸ்.பி.வேலுமணி..!!

 

-MMH

திமுகவின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி கூறியுள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்ட எந்த வாகுறுதிகளையும் நிறைவேற்றாதை திமுகவின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக வரும் 28 ஆம் தேதி ஜனநாயக வழியில் திமுகவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அதிமுகவினர் மாவட்டம் முழுவதும் தங்களின் வீடுகளில் பதாகைகள் ஏந்தி முழக்கமிட உள்ளார்கள்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடையே கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கோவை வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் தமிழக சட்டபேரவை துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவையில் மாநகரம், புறநகரம் என மூன்று மாவட்டத்திலும் 28 ஆம் தேதி கவன ஈர்ப்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தை புரட்சிதலைவியின் கோட்டை என்று நிரூபித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும், உங்களின் பொற்பாதங்களில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

கோவை மாவட்டத்தை சிறப்பு கவனம் எடுத்து தவறான குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள். 50 ஆண்டுகளில் எட்டப்படாத வளர்ச்சியை நாம் கோவை மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஸ்டாலின் பதவியேற்றதும், எனக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சேவை செய்வதாக கூறி விட்டு கோவை மாவட்டத்தில் 96 வளர்ச்சி பணிகளை நிறுத்தி விட்டனர் என குற்றம்சாட்டினார்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள், ஆனால் தற்போது அதை நிறைவேற்றாமல் உள்ளனர். அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். முதலில் என்வீட்டில்தான் சோதனை செய்வார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் என கூறினார்.

அடக்குமுறைக்கு அதிமுக தொண்டன் அஞ்சமாட்டோம் என கூறிய எஸ்பி வேலுமணி, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்பை தடுத்து மக்களை காப்பாற்றியுள்ளோம். திமுக ஆட்சியில் கொரோனாவால் மக்கள் உயிரிழப்பை தடுக்க முடியாமல் திமுக திணறியதாக விமர்சித்தார்.

மேலும் கொரானாவால் உயிரிழந்தவர்களுக்கு சான்றிதழ்கூட வழங்கவில்லை. கோவையில் சிறுவியாபாரிகளுக்காக இலவசமாக விற்பனை கூடம் கட்டிகொடுத்தோம், அதைக்கூட பொருக்கவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஆர்பாட்டமாக இருக்கவேண்டும். அனைவரும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் அனைத்து இடங்களிலும் பதாகைகளுடன் கோசங்கள் எழுப்பி இந்த கண்டன கவன ஈர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

திமுகவினரின் பொய் வழக்குகளை சமாளிக்க கோவை மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். திமுகவின் எந்த அடக்குமுறையையும் சந்திக்க தயாராக இருக்கின்றோம். என்மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். தொண்டர்கள் மீது வழக்கு தொடர்ந்து அடக்குமுறையை ஏற்படுத்தினால் சந்திக்க தயாராக உள்ளோம் என்று பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-I. அனஸ்..V.ஹரிகிருஷ்ணன்.

Comments