மஜக கோவை செல்வபுரம் வடக்கு கிளை பொதுக்குழு கூட்டம்!!

    -MMH

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக் குட்பட்ட செல்வபுரம் 77,78வது வார்டு பொதுக்குழு கூட்டம் பகுதி பொறுப்பாளர் HM முஹம்மது ஹனீப், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. கிளைசெயலாளர் பயாஸ் அவர்கள் செயல்பாடுகள் பற்றி கூறினார் பொருளாளர் அலி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்  

இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR. பதுருதீன், ஆகியோர் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். 

இதில் கிளை நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களால்  தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் (EBR,) அக்கீம், உமர், மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments