பொள்ளாச்சி ; 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - 20 வயது இளைஞர் போக்சோவில் கைது !!

 

-MMH

         பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமி தனியார் மில்லிற்கு வேலைக்கு சென்று வருகிறார்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த  20 வயது வாலிபரை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சிறுமி வாலிபரின் செல்பேசி எண்ணை வாங்கி கொண்டு வாலிபரை தொடர்பு கொண்டு பேசி கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் வாலிபர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து வாலிபர் சிறுமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டுபேசி வந்த நிலையில் ,இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமி வீட்டில் இல்லாததால் பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்துள்ளனர் . புகாரின் அடிப்படையில் கோட்டூர் காவல் துறையினர் வாலிபரையும், சிறுமியையும் அருப்புக்கோட்டையில் மீட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில் வாலிபர் சிறுமியை பல முறை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகத்திலேயே  குறிப்பாக தொடர்ந்து போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகும் காவல் நிலையமாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments