மீன் கழிவுகளை கொட்டியதால் அபராதம்!! - சம்பந்தப்பட்ட நபரே குப்பைகளை எடுக்கும்படி ஊராட்சி!!

   -MMH

பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையம் ஊராட்சியில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த உடுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மீன் கழிவுகளை ஊஞ்சவெலம்பட்டி சாலையோரத்தில் அப்புறப்படுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இதனால் ஏதாவது ஒரு நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் மீன் கழிவுகளை கொட்டும் கார்த்திகேயனை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நேற்று ஊஞ்சவெலம்பட்டி ஊராட்சி தலைவரிடம் ஒப்படைத்தனர்.

இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊஞ்சவெலம்பட்டி ஊராட்சிக்கு 20000 ரூபாய் அபராதம் வழங்கிடவும் கொட்டிய கழிவுகளை நீங்களே எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கார்த்திகேயன் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு 20 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை ஏற்றுக்கொண்டு தான் கொட்டிய மீன் கழிவுகளை அவரே எடுத்துச் சென்றார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்நிகழ்வு நடந்தது நேற்று 10.08.2021 ஆனால் ஊஞ்சவெலம்பட்டி ஊராட்சி பலவகை வரவு ரசீது சீட்டில் இன்றைய தேதியை அதாவது 11.08.2021 என்று குறிப்பிட்டுள்ளது. இது ஊஞ்சவேலம்பட்டி ஊராட்சியின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments