இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்!

  -MMH

   கிருங்காக்கோட்டை சேர்ந்தவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது துவரங்குறிச்சி அருகே பேருந்து மோதி ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கிருங்காகோட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29), அவரது மனைவி ஆனந்தி (27), ராஜ்குமார் தகப்பனார் பாண்டியன் (55). மூவரும் இரு சக்கர வாகனத்தில் துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம் என்ற ஊருக்கு உறவினர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர். ராஜ்குமார் இருசக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கவனக்குறைவாக சாலையின் வலது புறத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பிய போது மிக நெருக்கத்தில் பின்னால் வந்த திருச்சி செல்லும் அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நிகழ்ந்தது.

பேருந்தின் முன்புறம் சிக்கி, பலத்த காயமடைந்த மூவரையும் துவரங்குறிச்சி தீயணைப்புதுறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த பாண்டியன், சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார். கால்முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஆனந்தி இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் பாலாஜி, சார்பு ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் ராஜு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து கிருங்காகோட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- அப்துல் சலாம். 

Comments