தூத்துக்குடியில்சிறுமியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசி மிரட்டல்2 பேருக்கு போலீசார் வலைவீச்சு !!

 

-MMH

         தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன், திருவண்ணாமலையைச் சேர்ந்த சதிஷ் மற்றும் குரூஸ் ஆகிய 2 பேரும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும், சிறுமியுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி உள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்தார்களாம்.

       இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு நெல்லை செய்தியாளர்,

-அன்சாரி. 

Comments