75 ஆவது சுதந்திரதின விழா நிகழ்ச்சி போத்தனூர் ஸ்ரீராம் நகரில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது..!!

-MMH

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியிலுள்ள ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நமது இந்திய திருநாட்டின்75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீராம் நகரில் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  99வது வார்டில்சிறப்பாக பணிபுரியும் முன்கள பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சிறப்பாக நடந்த இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் மருத்துவர் அன்வர் அலி எம். பி. பி .எஸ் எம் எஸ். இ என் டி அவர்கள் எட்டு முப்பது மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

பின்பு அங்கே குழுமியிருந்த பொதுமக்களிடம் சிறிது நேரம் உரையாடினார் அதில் கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிய மருத்துவர் பொது மக்களை முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்ரீராம் நகர் குடியிருப்போர்  சங்கத்தின் தலைவர் முருகேசன் செயலாளர் கே எஸ். மோகன் பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் சங்க உறுப்பினர்கள் முகம்மது ஈசா, கண்ணன், கோகுல், சுரேஷ், பாபு, ஆசிப், அபி, சாந்தி, பத்மா, சாவித்திரி, விஜயலட்சுமி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தமிழகதலைமை நிருபர்,

-ஈசா.

Comments