விநாயகர் சதுர்த்தி விழா நடத்த கோரி அனைத்து கோவில்களிலும் இறைவனிடம் முறையீடு செய்ய இந்து முன்னணி திட்டம்!!

   -MMH
    கோவை வரும் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த கோரி அனைத்து கோவில்களிலும் இறைவனிடம்  இந்து முன்னணி முறையீடு செய்ய உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை ராம்நகரில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாக திமுகவின் ஆட்சி  செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். 

முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுவதாக கூறிய அவர்,பக்ரீத் பண்டிகையின் போது ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்துக்களை தொடர்ந்து திமுக அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்,  கிறிஸ்தவர்களின் பண்டிகையும் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது ஆனால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறினார். ஹிந்துக்களுக்கு இடையே  ஒற்றுமை உருவாக கூடாது என்பதற்காக பெரிய சதித் திட்டம் நடப்பதாகவும், திமுக அரசாங்கம் நாத்திக அரசாங்கமாக செயல்படுவதாகவும் அவர் சாடினார். அரசாங்கம் தங்கள் கோரிக்கையை கேட்காத நிலையில் கடவுளிடம் இந்து முன்னணி முறையிட உள்ளது என்றும், வரும் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த வேண்டும் என அனைத்து கோவில்களிலும் இறைவனிடம் இந்து முன்னணி முறையீடு செய்ய உள்ளதாகவ காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

- சீனி,போத்தனூர்.

Comments