செங்கை ஆணழகன் சங்கம் சார்பாக ' உடற்பயிற்சியே உள்ளத்தின் தூய்மை' என்ற தலைப்பில் மராத்தான் ஓட்டப் பந்தய போட்டி!!

     -MMH

செங்கை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் செயலாளர் எம் அரசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ' உடல் பயிற்சியை உள்ளத்தின் தூய்மை என்ற தலைப்பில் மராத்தான் ஓட்டப் பந்தய  போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டியில் அஸ்தினாபுரம் கோசல ராமன் எஸ் எஸ் பி ஜி மாணவர்கள் சார்பாக 24 பேர் கலந்துகொண்டு மராத்தான் ஓட்டப் போட்டியில் ஓடினர்.

காலை 5 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த மராத்தான் போட்டி ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மராத்தான் வீரர் கோல்டி பிரகாஷ் தலைமை வகித்தார். மாஸ்டர் பி சந்துரு மற்றும் லட்சுமிபதி முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் நாகராஜ்,கார்த்திக், மகேந்திரன்,ரபீக், கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர், தன் பிறந்தநாளை முன்னிட்டு திரு எம் அரசு அவர்கள் நிர்வாகிகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பிரகாஷ், செங்கல்பட்டு, முகமது சாதிக் அலி.

Comments